Friday, 18 June 2010

அவன் பயணம் தொடரந்தது....


 சாலையின் சிக்னலில் 
 எதிரெதிரே பேருந்துகள் 
 இளைப்பாற...
 இருக்கையின் ஓரத்தில் 
ஆடி,ஓடி ..அடங்கிய
அவர்  ....அல்ல 
அவன்  ..,

 தூரத்தில், பேருந்தில் 
அழகிய முகம் ..,அவன் 
காதலித்த ..
அதே முகம் ...காலம் 
கொஞ்சம் வயதாக்கி விட்டது !!!

 ஆண்கள் எளிதில் 
 எதையும் மறப்பதில்லை !!
 பெண்கள் எளிதில் 
 எதையும் நினைப்பதில்லை!!!

 காதல் பிரிய 
 ஆயிரம்  காரணங்கள்..,உண்டு ...
 அதில் ஒன்று ...கூடவா ?
  இல்லை ...
  காதலில் சேருவதற்கு ...?

 காதலி ,
 எங்கே ..,
 எவ்வளவு ..
 தூரத்தில் இருந்தாலும் ...
 கண்டுபிடிப்பவர்களும்..இந்த 
 ஆண்கள் தான் ..,!!!!
 கண் கசக்குபவர்களும்..இந்த 
 ஆண்கள் தான் !!!!  ...

 காதல் ..,
 பாடம் சொல்லாமல் 
 போனதில்லை ..,
 காதலிப்பவர்களுக்கு....>>>>

 அவன் காதல் 
 கவிஞனாக்கியது...
 அவன் எழுதிய 
 முதல் புத்தகம் ..
" காதல் ஒருவனை 
  கவிஞனாக்கியது""

 அவள் கைகளில் 
 அதை பார்த்த போது ...

 "என்றுமே காதல் 
     தோற்பதில்லை...
  காதலர்கள் தான்,
    தோற்க்கிறார்கள்...."
 
நினைவுகளுடன் ...
     அவன் பயணம் தொடர்ந்தது.....!!!! 
  

Tuesday, 15 June 2010

யாரிடம்.., புகார் கொடுக்க உன்னைப் பற்றி?





கடமை ..,
நாட்டு உடைமை 
ஆகாத வார்த்தை ...

காலம் தவறி
வரும் அரசு பேருந்து,, 
தவறாமல் மீதி தராத 
நடத்துனர்...,

அரசு மருத்துவமனையில்..
கடைசியாய் நுழையும் 
பொதுநல மருத்துவர் ..,
வரிசைக்கும் காசு, 
வாங்கும் கம்பவுண்டர்....

ஒவ்வொரு முறையும் 
வாக்கு தரும் வேட்பாளர் ..
வாக்கு தவறினாலும் 
அவருக்கே வாக்கு 
போடும் வாக்களர்கள்...!!!!

எல்லாம் சரியாய் இருந்தும் ..,
எதிர்பார்க்கும் ட்ராபிக் போலீஸ் ..
எதிர்பார்த்ததை எதிர்க்காமல் ,
இயல்பாய் கொடுக்கும் வாகனஓட்டிகள்....

இப்படியே புலம்பி 
புகார் கொடுக்க ...இறைவனிடம் 
செல்ல ,வழியில் ..,
ஒரு குருடன் ...
அட ..!கடவுளே...நீயும் 
கடமையை சரிவர,
செய்யவில்லையே? ...
யாரிடம்.., 
புகார் கொடுக்க. 
உன்னைப்  பற்றி ...,