Friday 30 April 2010

வேடிக்கை பார்த்தே பழகியவர்கள் நாமல்லவா !!!

"வேடிக்கை பார்த்தே 
 பழகியவர்கள் நாம் ...

 விபத்து நடந்தாலும்
 சுற்றி நின்று 
 'அய்யோயோ பாவம்ல !!!"
 என்றே உச் கொட்டுபவர்கள்...

 தமிழனை யாரு கொன்றாலும் 
 "நம் வீட்டில் நடக்கலல!!!"
 அப்பாடா .. தப்பித்தோம் !..
 என்றே பெருமூச்சு விடுபவர்கள் ...

 எப்படியேனும் ...
 எவருக்கேனும்....
 லஞ்சம் கொடுத்து 
 தன் காரியம் சாதிக்கும் 
 சாதனையாளர்கள் நாமல்லவா!!!!!!

 மனநிலை குன்றியவர்கள் 
 மந்தைகளாய் சுற்றினாலும் ...
 "அட இங்க பாருடா...லூசே !!!
 கிறுக்கே ..,பைத்தியத்தை ...,
 மெண்டலே ..."என்றே சொல்லும் 
 வார்த்தை கெட்டிக்காரர்கள்...நாம் 

 காசுக்காக ஓட்டை விற்கும் 
 மக்களாட்சியின் ...மிக 
 தந்திர வியாபாரிகள் நாம் ....தானே !!

 இப்படி யார் சொன்னாலும் 
 வாடிக்கையாய்..
 வேடிக்கை பார்த்தே 
  பழகியவர்கள் நாமல்லவா !!!!!...."

    

Monday 26 April 2010

யாரும் இல்லை ....


" சிரிப்பலையுமாய்..
  சிகரெட் புகையுமாய்..
  சிறகடித்த இடம் ..

  நீண்ட வரிசையாய்
  தோள் மீது தோள் இடித்து
  இளைப்பாறிய இடம் 

  சில சமயம் பளிச்சிடும் 
  மழைச் சாரலில் 
  கறுத்திடும்...

  எப்போது போனாலும், 
  எனக்கொரு இடமிருக்கும்.., 
  எழுந்து போனாலும் ..,
  என் தடம் இருக்கும் ,.,
  எல்லாம் காலத்தும்..,
  நிரம்பி இருக்கும் ..... 

  இளம் வயதில் அங்கே 
  வரத் துடிக்கும் ..
  முதுமையில் வர நினைத்தாலும் 
  வயது தடுக்கும் ...
 
  காதல் கூட காணாமல் 
  கடந்து இருக்கலாம் -
  சிலர் தம் வாழ்வில் ...
  இந்த குட்டிச்  சுவர் காணாமல் 
  யாரும் இல்லை 
  பலர் தம் வாழ்வில்..."

Tuesday 13 April 2010

ஒரு நாள் ... வித்தியாசமாக..


" ஒரு நாள் ...
  வித்தியாசமாக...
  இப்படி ...

  செல்பேசி அழைத்தாலும் ...
  கையில் எடுக்காமல் ..
  மௌனமாய் இருங்கள் ..!!!

  கொசு கடித்தாலும் ...
  திருப்பி அடிக்காமல் ...
  அட ..!!இரத்தம்...கூட 
  உணவாகிறதே...என்று 
  மார்..தட்டுங்கள்.....!

 பெற்றோர்களை ...
 குழந்தைகளாக்கி...
 குழந்தைகளை...
 பெற்றோர்களாக்கி...விடுங்கள் ...


 உங்கள், 
 நிழலோடு ...
 நிஜமாக ...
 பேசி,சிரித்து,..சண்டையிட்டு 
 பாருங்கள் ..
       
 காதலியை .. ஓட்டுனராக்கி..,
 மோட்டார் வண்டியில் 
 நகர் முழுவதும் ...சுற்றுங்கள் ...

 குடிசையில்..கால் பதித்து 
 மதிய உணவு ...
 கஞ்சி இருப்பினும்
 வயிராற....சாப்பிடுங்கள் ...

 விடிந்த காலையில் ...
 தெருக்களில் போட்ட ...
 கோலத்தை சுற்றிப் பார்த்து
 மதிப்பெண் போடுங்கள் ,,,.
 யார்க்கும் தெரியாமல் ...!

 கடந்து...செல்லும் 
 'ஆம்புலன்ஸ்யில் ' ....யாராக 
 இருப்பினும் ..ஒரு நிமிடம் 
 அந்த இடத்திலே ...நின்று 
 வேண்டிப்  பாருங்கள் .....

 இப்படித்தான்...
 இவையெல்லாம் ...
 வித்தியாசமாகவே....இருக்கிறது ...
 எல்லா நாளும் ...

Tuesday 6 April 2010

கவிஞன் வலி..கவிஞன் .அறிவானோ ....?


"கவிதை எழுத 
 இடம் தேடி ...,
 கடற்கரையில்
 கால் பதித்தேன் ..,அங்கே !!!!
 எல்லோரும்  
 எல்லை மீறிய காதலர்கள் ..
 எழுந்து விட்டேன் ...
 ஒட்டிய மணலோடு .....!!!!

கல்லூரிஐ 
எட்டிப் பார்த்தேன் ...
சரஸ்வதிஐ விலை பேசினர்
மெத்த படித்த முட்டாள்கள் ...!!!

கவி அரங்கத்தில் 
இடம் கேட்டேன் ...!
புதுக்கவிதை..
அரங்கேற்றபடாதம்.!!...
கவி பாடினர் ...
பழைய கவிகள் ....

அடுத்து ...
பூங்காவில்...
பூக்களை ..
அமைதியாய்...அமர செய்து 
கவி சொல்ல ஆரம்பித்தேன்...
காலம் கடந்ததால்..
கதவை அடைத்தான்..
காவலாளி ....     
சிறு குழந்தயை 
ஆசை காட்டி ...
ஏமாற்றிய ...உணர்வுடன் 
திரும்பினேன்...

இறுதியாக ...
நிலவு நினைவு வர...
அன்று அமாவாசையாம் ...
நிலவும் வரவில்லை ...

அடக்கடவுளே...!!!
இப்படியுமா.?.என்று நினைக்க..,
தூரத்தில் ஒரு மனிதன் ..
கைநீட்டி ...அழைத்தான் ...
அவனை ,,அவனே ...
இனம் காண...வெளிச்சம் ...
வா,உட்கார்,எழுது ..
என்றார் ...
தெருவில் நிற்கும் ...என் 
தேசியக் கவி ...
எழுதினேன்...
 "கவிஞனின் 
  வலி...
  கவிஞன் ...
  அறிவானோ ....??"..."
    


Sunday 4 April 2010

ஒரு இரவில் அல்ல ...


"..சாக்கடையை..
   அசுத்தம் செய்யாத 
   பெண் சிசுக்கொலை ..,

   கூட்டமில்லாத 
   பள்ளிக்கூட ஆட்டோ 
   பயணம் ...
  
   மணல் திருடா
   டிப்பர் லாரி ...
   லஞ்சம் வாங்காத..
   தாசில்தார் .....

   இடிக்காத பேருந்துப் பயணம் ..,
   கடிக்காத..வெறி நாய்கள் ..

  அதிக வண்டிகள்    
  வராத அரசியல் ..,
  அழகாக இட்ட ..
  தமிழ் கையொப்பம்...

  இச்சையில்லாத காதல் ..,
  கொச்சைபடுத்தா..,
  ஆண் -பெண் நட்பு .... 

  குடிக்காத தகப்பன் ..,
  குடித்தாலும் அடிக்காத அப்பன் ...

  சிக்கனம் இல்லாத 
  சினிமா நடிகை..
  சபலப்படாத சாமியார்கள் ..
  'சாது' மிரளா சாதிகள் ..
  'மதம்' பிடிக்காத மதங்கள் ...

  ஆபாசம் இல்லாத SMS ...
  அசிங்கம் இல்லாத MMS ...
   பப் இல்லாத நகர் வீதிகள் ..
  டூப் போடாத மருந்துகள்...
 
  புகை இல்லா பூமி ..
  பலி கேட்கா சாமி..

  அகதிகள் இல்லாத தேசங்கள் ...
  கைதிகள் இல்லாத சிறைவாசல்கள் ....  
 
 அணுகுண்டு தயாரிக்காத 
 அதிகார நாடுகள் ,..
  வெடிகுண்டு 
  வைக்காத தீவிரவாதிகள்... 

   இப்படிதான் ..என் தூக்கம் 
   கலைகிறது ...
   ஒரு இரவில் அல்ல ...
   ஒ வ்வொரு...
                         இரவிலும் ...." 

Thursday 1 April 2010

---->அவள் அப்படிதான் !!


ஒரு நாள் ...
   கடற்கறை...இரவு ....,
   அலையோடு பேசி விட்டு ,
   வரும் போது ...

   வழியில் எங்கயோ...
   பார்த்த முகம் ...
   எனக்கும் புரிந்தது 
   அவளுக்கும் புரிந்தது ...
  
   தெரியாததை..,
   தெரிந்தது ...போல் காட்டுவது இயற்கை  ...
   தெரிந்ததை ...
   தெரியாது போல் காட்டுவது செயற்கை ...!

   அவள் 
   இரண்டாம் வகை ...
   சற்று பின்நாளில்
   ஓடினேன்...கல்லூரிக்கு ...

   என் கல்லூரி 
   மரத்தடி ..
   ஓவ்வொன்றும்...
   ஒவ்வொரு.. கதை சொல்லும் ...

   நம் நாட்டில் ...
   நட்பின் இலக்கணம்..
   ஆண்-ஆண் ...
   பெண் -பெண் ..
 
   பெண்ணோடு ...பேசி விட்டால் 
   கடலை ,காதல் ...
   என்பார்கள் ...பேசத்  தெரியாத ..
   பிரம்மசார்ரிகள்....!!!
 
   ஏனோ ?...
   பேசாமலே சென்று விட்டால் ...
   என் தோழி ...

   நான் கவனிக்கவில்லை ..
   அவள் வந்து இருப்பது 
   அவள் ..,கணவனோடு ..

    என்னை கூட்டி 
   அறிமுகம் ..செய்ய ...
   முடியவில்லை ...அவளுக்கு ...
    இல்லை ...!இல்லை ...
   அவள் சூழ்நிலைக்கு ...

   சார் ..,கொஞ்சம் ..
   தள்ளி நில்லுங்க ,..,
   நாங்கள் போகணும் ...
   என்று ...
   சொன்னால் ...,
   கணவனோடு...அவள் ....!!!!! "