Tuesday 28 December 2010

பிடித்து போன ஒன்று ......


                                           "
                                          மறதி ...,
                                          பிடித்து போன ஒன்று ......!!!

                                          காவி சாயங்களை 
                                          எத்தனை முறை 
                                          வெளுத்தாலும் ...
                                          மறந்து போனதால் 
                                          மறதி பிடித்து போனது .....,,,!!!!

                                          கார்க்கில்            
                                          சிலருக்கு ..மீளாதுயரம் 
                                          சிலருக்கு ..நாட்டுப்பற்று 
                                          சிலருக்கு ...வரவு ..
                                          சிலருக்கு ...வாழ்க்கை 
                                          மறக்க நினைப்பதால் 
                                          மறதி பிடித்து போனது .....,!!!
                                           
                                          '2G  ' அலைவரிசை ..
                                          என்னவென்ற தெரியவில்லை ..
                                          என் போன்ற பாமரனுக்கு 
                                          தெரிந்தவனும் ..எதிர்க்க 
                                          வில்லை ..        
                                          எப்படியும் மறந்து 
                                          போய்விடும் என்பதால் ..
                                          மறதி பிடித்து போனது .....,!!  

                                          விளையாட்டு கற்று 
                                          தந்தது ...
                                          'குழு ஒற்றுமை '..
                                          'போராட்டம் '
                                          'நொடிகளின் அருமை '
                                          'பணம் புரட்டும் ...
                                          மறுபக்கம் ....' -மறுபடியும் 
                                          நினைவு படுத்த 
                                          விரும்பாதாதல் ..
                                          மறதி பிடித்து போனது .....,

                                         பலவற்றை ..எழுத 
                                         நினைத்தும் ..சிலவற்றை 
                                         மறந்ததால்...
                                         சில சமயங்களில் ...
                                         இந்த மறதி ..கூட 
                                         பிடித்து தான் போகுகிறது ,,,
                                         என்னை போல் .
                                         பலருக்கும் ...."   

Saturday 14 August 2010

எல்லோர்க்கும் ஒரு சின்ன வருத்தம்......



                                              "சுதந்திரம் இது ...
                                               தந்திரமாய் விற்கபட்ட
                                               பொருள் .....

                                               சுதந்திரம்,
                                               உயிர் எடுத்து வாங்கவில்லை ...
                                               உயிர் கொடுத்து வாங்கப்பட்டது .....

                                               தேசியகீதம் கேட்டால்
                                               உடல் புல்லரிக்கும் 
                                               ஒரு நிமிட 
                                               தேசியவாதிகள் ...நாம் .,

                                               இங்கே அறியாமைகள்
                                               இலவசங்களினால்...
                                               அடைக்கப்படுகிறது....

                                               சவப்பெட்டி முதல் ..,
                                               காமன்வெல்த் வரை ....  
                                               நம் புகழ் பரவிக்  கிடக்கிறது ...   
  
                                               சுதந்திரத்தின் தழும்புகள்
                                               நம் அரும்புகளுக்கு 
                                               தெரியாமலே போகலாம் 
                                               இன்னும் சில காலங்களில்....

                                               எப்படி ..இருந்தால் ,,என்ன ?
                                               இந்த வருடம் ...
                                               சண்டே வந்ததில்...
                                               எல்லோர்க்கும் ஒரு சின்ன 
                                               வருத்தம் ..."     
                                                              
                                                                                      

Sunday 1 August 2010

--->காதலுக்கும் வகைகள் உண்டு----




                                            "இங்கே .,
                                            காதலுக்கும் வகைகள் உண்டு ..
                                            ஒன்று நல்லக் காதல் ..
                                            மற்றொன்று கள்ளக் காதல் ...

                                            காதலுக்காக 
                                            தற்கொலைகள் - அன்று ..        
                                            காமத்துக்காக 
                                           கொலைகள் - இன்று ...
                         
                                           கொலையும் செய்வாள் 
                                           பத்தினி - அன்று ...
                                           சிசுக்கொலையும்  செய்வாள் 
                                          (கள்ளக் )காதலி - இன்று .....
                                                                                                            
                                           எல்லாவற்றையும் 
                                           அசுத்தப்படுத்தி விட்டோம்   
                                           கடைசியாய் 
                                           காதலையும் , 
                                          அசிங்கபடுத்தி விட்டோம் ..,

                                           கட்டுப்பாடு இல்லாத 
                                           காதல் == காமம் ...,
                                           கட்டுப்பாடு இல்லாத 
                                           காமம் == மிருகம் ...,

                                           சில 
                                           சமயங்களில் 
                                           சில 
                                           உணர்ச்சிகள்
                                           ஜெயித்து தான் போகிறது....."
                                                                                                                                       

Friday 18 June 2010

அவன் பயணம் தொடரந்தது....


 சாலையின் சிக்னலில் 
 எதிரெதிரே பேருந்துகள் 
 இளைப்பாற...
 இருக்கையின் ஓரத்தில் 
ஆடி,ஓடி ..அடங்கிய
அவர்  ....அல்ல 
அவன்  ..,

 தூரத்தில், பேருந்தில் 
அழகிய முகம் ..,அவன் 
காதலித்த ..
அதே முகம் ...காலம் 
கொஞ்சம் வயதாக்கி விட்டது !!!

 ஆண்கள் எளிதில் 
 எதையும் மறப்பதில்லை !!
 பெண்கள் எளிதில் 
 எதையும் நினைப்பதில்லை!!!

 காதல் பிரிய 
 ஆயிரம்  காரணங்கள்..,உண்டு ...
 அதில் ஒன்று ...கூடவா ?
  இல்லை ...
  காதலில் சேருவதற்கு ...?

 காதலி ,
 எங்கே ..,
 எவ்வளவு ..
 தூரத்தில் இருந்தாலும் ...
 கண்டுபிடிப்பவர்களும்..இந்த 
 ஆண்கள் தான் ..,!!!!
 கண் கசக்குபவர்களும்..இந்த 
 ஆண்கள் தான் !!!!  ...

 காதல் ..,
 பாடம் சொல்லாமல் 
 போனதில்லை ..,
 காதலிப்பவர்களுக்கு....>>>>

 அவன் காதல் 
 கவிஞனாக்கியது...
 அவன் எழுதிய 
 முதல் புத்தகம் ..
" காதல் ஒருவனை 
  கவிஞனாக்கியது""

 அவள் கைகளில் 
 அதை பார்த்த போது ...

 "என்றுமே காதல் 
     தோற்பதில்லை...
  காதலர்கள் தான்,
    தோற்க்கிறார்கள்...."
 
நினைவுகளுடன் ...
     அவன் பயணம் தொடர்ந்தது.....!!!! 
  

Tuesday 15 June 2010

யாரிடம்.., புகார் கொடுக்க உன்னைப் பற்றி?





கடமை ..,
நாட்டு உடைமை 
ஆகாத வார்த்தை ...

காலம் தவறி
வரும் அரசு பேருந்து,, 
தவறாமல் மீதி தராத 
நடத்துனர்...,

அரசு மருத்துவமனையில்..
கடைசியாய் நுழையும் 
பொதுநல மருத்துவர் ..,
வரிசைக்கும் காசு, 
வாங்கும் கம்பவுண்டர்....

ஒவ்வொரு முறையும் 
வாக்கு தரும் வேட்பாளர் ..
வாக்கு தவறினாலும் 
அவருக்கே வாக்கு 
போடும் வாக்களர்கள்...!!!!

எல்லாம் சரியாய் இருந்தும் ..,
எதிர்பார்க்கும் ட்ராபிக் போலீஸ் ..
எதிர்பார்த்ததை எதிர்க்காமல் ,
இயல்பாய் கொடுக்கும் வாகனஓட்டிகள்....

இப்படியே புலம்பி 
புகார் கொடுக்க ...இறைவனிடம் 
செல்ல ,வழியில் ..,
ஒரு குருடன் ...
அட ..!கடவுளே...நீயும் 
கடமையை சரிவர,
செய்யவில்லையே? ...
யாரிடம்.., 
புகார் கொடுக்க. 
உன்னைப்  பற்றி ..., 

Tuesday 4 May 2010

பத்திரப்படுத்தாலமே .....???????

  
 " செவ்வாயில் தண்ணீர் 
    தேட வேண்டாம் ...
    இருக்கும் பூமியையாவது...
    பத்திரப்படுத்துவோம்...

    புதிதாய் மரம் 
    நட வேண்டாம் ....
    இருக்கும் மரங்களையாவது
    கொலை செய்யாமல் ...
    பத்திரப்படுத்துவோம்..

    புதிதாய் தொழிற்சாலைகள் 
    தொடங்க வேண்டாம் ..
    எஞ்சி இருக்கும் ஓசான்
    படலத்தையாவது ...
    பத்திரப்படுத்துவோம்....

    புதிய புதிய மருந்துகள் 
    கண்டுபிடிக்க வேண்டாம் ...
    இருக்கும் மருந்துகளில் 
    போலி இல்லாமல் ..
    பத்திரப்படுத்துவோம்...

    புதிய தொழிநுட்ப 
    செல்பேசிகள் வேண்டாம் ...
    இருக்கும் செல்பேசிகளையாவது
    ஆபாசத்திற்கு பயன்படுத்தாமல்....
    பத்திரப்படுத்துவோம்...

    புதிதாய் சாமியார்கள் 
    தேடி போக வேண்டாமே ....
   அருகில்  இருக்கும்
   "அப்பா -அம்மாவை "...யாவது 
    பத்திரப்படுத்தாலமே .....????????  "




Friday 30 April 2010

வேடிக்கை பார்த்தே பழகியவர்கள் நாமல்லவா !!!

"வேடிக்கை பார்த்தே 
 பழகியவர்கள் நாம் ...

 விபத்து நடந்தாலும்
 சுற்றி நின்று 
 'அய்யோயோ பாவம்ல !!!"
 என்றே உச் கொட்டுபவர்கள்...

 தமிழனை யாரு கொன்றாலும் 
 "நம் வீட்டில் நடக்கலல!!!"
 அப்பாடா .. தப்பித்தோம் !..
 என்றே பெருமூச்சு விடுபவர்கள் ...

 எப்படியேனும் ...
 எவருக்கேனும்....
 லஞ்சம் கொடுத்து 
 தன் காரியம் சாதிக்கும் 
 சாதனையாளர்கள் நாமல்லவா!!!!!!

 மனநிலை குன்றியவர்கள் 
 மந்தைகளாய் சுற்றினாலும் ...
 "அட இங்க பாருடா...லூசே !!!
 கிறுக்கே ..,பைத்தியத்தை ...,
 மெண்டலே ..."என்றே சொல்லும் 
 வார்த்தை கெட்டிக்காரர்கள்...நாம் 

 காசுக்காக ஓட்டை விற்கும் 
 மக்களாட்சியின் ...மிக 
 தந்திர வியாபாரிகள் நாம் ....தானே !!

 இப்படி யார் சொன்னாலும் 
 வாடிக்கையாய்..
 வேடிக்கை பார்த்தே 
  பழகியவர்கள் நாமல்லவா !!!!!...."

    

Monday 26 April 2010

யாரும் இல்லை ....


" சிரிப்பலையுமாய்..
  சிகரெட் புகையுமாய்..
  சிறகடித்த இடம் ..

  நீண்ட வரிசையாய்
  தோள் மீது தோள் இடித்து
  இளைப்பாறிய இடம் 

  சில சமயம் பளிச்சிடும் 
  மழைச் சாரலில் 
  கறுத்திடும்...

  எப்போது போனாலும், 
  எனக்கொரு இடமிருக்கும்.., 
  எழுந்து போனாலும் ..,
  என் தடம் இருக்கும் ,.,
  எல்லாம் காலத்தும்..,
  நிரம்பி இருக்கும் ..... 

  இளம் வயதில் அங்கே 
  வரத் துடிக்கும் ..
  முதுமையில் வர நினைத்தாலும் 
  வயது தடுக்கும் ...
 
  காதல் கூட காணாமல் 
  கடந்து இருக்கலாம் -
  சிலர் தம் வாழ்வில் ...
  இந்த குட்டிச்  சுவர் காணாமல் 
  யாரும் இல்லை 
  பலர் தம் வாழ்வில்..."

Tuesday 13 April 2010

ஒரு நாள் ... வித்தியாசமாக..


" ஒரு நாள் ...
  வித்தியாசமாக...
  இப்படி ...

  செல்பேசி அழைத்தாலும் ...
  கையில் எடுக்காமல் ..
  மௌனமாய் இருங்கள் ..!!!

  கொசு கடித்தாலும் ...
  திருப்பி அடிக்காமல் ...
  அட ..!!இரத்தம்...கூட 
  உணவாகிறதே...என்று 
  மார்..தட்டுங்கள்.....!

 பெற்றோர்களை ...
 குழந்தைகளாக்கி...
 குழந்தைகளை...
 பெற்றோர்களாக்கி...விடுங்கள் ...


 உங்கள், 
 நிழலோடு ...
 நிஜமாக ...
 பேசி,சிரித்து,..சண்டையிட்டு 
 பாருங்கள் ..
       
 காதலியை .. ஓட்டுனராக்கி..,
 மோட்டார் வண்டியில் 
 நகர் முழுவதும் ...சுற்றுங்கள் ...

 குடிசையில்..கால் பதித்து 
 மதிய உணவு ...
 கஞ்சி இருப்பினும்
 வயிராற....சாப்பிடுங்கள் ...

 விடிந்த காலையில் ...
 தெருக்களில் போட்ட ...
 கோலத்தை சுற்றிப் பார்த்து
 மதிப்பெண் போடுங்கள் ,,,.
 யார்க்கும் தெரியாமல் ...!

 கடந்து...செல்லும் 
 'ஆம்புலன்ஸ்யில் ' ....யாராக 
 இருப்பினும் ..ஒரு நிமிடம் 
 அந்த இடத்திலே ...நின்று 
 வேண்டிப்  பாருங்கள் .....

 இப்படித்தான்...
 இவையெல்லாம் ...
 வித்தியாசமாகவே....இருக்கிறது ...
 எல்லா நாளும் ...

Tuesday 6 April 2010

கவிஞன் வலி..கவிஞன் .அறிவானோ ....?


"கவிதை எழுத 
 இடம் தேடி ...,
 கடற்கரையில்
 கால் பதித்தேன் ..,அங்கே !!!!
 எல்லோரும்  
 எல்லை மீறிய காதலர்கள் ..
 எழுந்து விட்டேன் ...
 ஒட்டிய மணலோடு .....!!!!

கல்லூரிஐ 
எட்டிப் பார்த்தேன் ...
சரஸ்வதிஐ விலை பேசினர்
மெத்த படித்த முட்டாள்கள் ...!!!

கவி அரங்கத்தில் 
இடம் கேட்டேன் ...!
புதுக்கவிதை..
அரங்கேற்றபடாதம்.!!...
கவி பாடினர் ...
பழைய கவிகள் ....

அடுத்து ...
பூங்காவில்...
பூக்களை ..
அமைதியாய்...அமர செய்து 
கவி சொல்ல ஆரம்பித்தேன்...
காலம் கடந்ததால்..
கதவை அடைத்தான்..
காவலாளி ....     
சிறு குழந்தயை 
ஆசை காட்டி ...
ஏமாற்றிய ...உணர்வுடன் 
திரும்பினேன்...

இறுதியாக ...
நிலவு நினைவு வர...
அன்று அமாவாசையாம் ...
நிலவும் வரவில்லை ...

அடக்கடவுளே...!!!
இப்படியுமா.?.என்று நினைக்க..,
தூரத்தில் ஒரு மனிதன் ..
கைநீட்டி ...அழைத்தான் ...
அவனை ,,அவனே ...
இனம் காண...வெளிச்சம் ...
வா,உட்கார்,எழுது ..
என்றார் ...
தெருவில் நிற்கும் ...என் 
தேசியக் கவி ...
எழுதினேன்...
 "கவிஞனின் 
  வலி...
  கவிஞன் ...
  அறிவானோ ....??"..."
    


Sunday 4 April 2010

ஒரு இரவில் அல்ல ...


"..சாக்கடையை..
   அசுத்தம் செய்யாத 
   பெண் சிசுக்கொலை ..,

   கூட்டமில்லாத 
   பள்ளிக்கூட ஆட்டோ 
   பயணம் ...
  
   மணல் திருடா
   டிப்பர் லாரி ...
   லஞ்சம் வாங்காத..
   தாசில்தார் .....

   இடிக்காத பேருந்துப் பயணம் ..,
   கடிக்காத..வெறி நாய்கள் ..

  அதிக வண்டிகள்    
  வராத அரசியல் ..,
  அழகாக இட்ட ..
  தமிழ் கையொப்பம்...

  இச்சையில்லாத காதல் ..,
  கொச்சைபடுத்தா..,
  ஆண் -பெண் நட்பு .... 

  குடிக்காத தகப்பன் ..,
  குடித்தாலும் அடிக்காத அப்பன் ...

  சிக்கனம் இல்லாத 
  சினிமா நடிகை..
  சபலப்படாத சாமியார்கள் ..
  'சாது' மிரளா சாதிகள் ..
  'மதம்' பிடிக்காத மதங்கள் ...

  ஆபாசம் இல்லாத SMS ...
  அசிங்கம் இல்லாத MMS ...
   பப் இல்லாத நகர் வீதிகள் ..
  டூப் போடாத மருந்துகள்...
 
  புகை இல்லா பூமி ..
  பலி கேட்கா சாமி..

  அகதிகள் இல்லாத தேசங்கள் ...
  கைதிகள் இல்லாத சிறைவாசல்கள் ....  
 
 அணுகுண்டு தயாரிக்காத 
 அதிகார நாடுகள் ,..
  வெடிகுண்டு 
  வைக்காத தீவிரவாதிகள்... 

   இப்படிதான் ..என் தூக்கம் 
   கலைகிறது ...
   ஒரு இரவில் அல்ல ...
   ஒ வ்வொரு...
                         இரவிலும் ...." 

Thursday 1 April 2010

---->அவள் அப்படிதான் !!


ஒரு நாள் ...
   கடற்கறை...இரவு ....,
   அலையோடு பேசி விட்டு ,
   வரும் போது ...

   வழியில் எங்கயோ...
   பார்த்த முகம் ...
   எனக்கும் புரிந்தது 
   அவளுக்கும் புரிந்தது ...
  
   தெரியாததை..,
   தெரிந்தது ...போல் காட்டுவது இயற்கை  ...
   தெரிந்ததை ...
   தெரியாது போல் காட்டுவது செயற்கை ...!

   அவள் 
   இரண்டாம் வகை ...
   சற்று பின்நாளில்
   ஓடினேன்...கல்லூரிக்கு ...

   என் கல்லூரி 
   மரத்தடி ..
   ஓவ்வொன்றும்...
   ஒவ்வொரு.. கதை சொல்லும் ...

   நம் நாட்டில் ...
   நட்பின் இலக்கணம்..
   ஆண்-ஆண் ...
   பெண் -பெண் ..
 
   பெண்ணோடு ...பேசி விட்டால் 
   கடலை ,காதல் ...
   என்பார்கள் ...பேசத்  தெரியாத ..
   பிரம்மசார்ரிகள்....!!!
 
   ஏனோ ?...
   பேசாமலே சென்று விட்டால் ...
   என் தோழி ...

   நான் கவனிக்கவில்லை ..
   அவள் வந்து இருப்பது 
   அவள் ..,கணவனோடு ..

    என்னை கூட்டி 
   அறிமுகம் ..செய்ய ...
   முடியவில்லை ...அவளுக்கு ...
    இல்லை ...!இல்லை ...
   அவள் சூழ்நிலைக்கு ...

   சார் ..,கொஞ்சம் ..
   தள்ளி நில்லுங்க ,..,
   நாங்கள் போகணும் ...
   என்று ...
   சொன்னால் ...,
   கணவனோடு...அவள் ....!!!!! "

Wednesday 24 March 2010

சில கேள்விகள்...

"மலையில்...
 மழைச் சாரலில் ..
 மாலையின்...மயக்கத்தில் ,
 மகனோடு நான் ..

 சில கேள்விகள் 
 பிடிக்கும் ..
 சிலர் ..
 கேட்பதால் மட்டும் ....

அப்பா ,
நட்பு என்றால் ..?
மாதா...
பிதா ...,
                                           குரு ...,
                                           நண்பன் ...,
                                           தெய்வம் என்பேன் ....

ஆச்சரியமான உண்மை என்றால்..?
 சிறு வயதில் ..,
 அம்மா சொல்லி 
 அப்பா தெரியும் ,,,
 அப்பா சொல்லி ...
 அனைத்து உறவும் 
 தெரியும் ...
 இது தான் உன் 
 நண்பன் என்று ....
 இது வரை .எவரும் 
 கூறியது இல்லை ....யப்பா ....

 ஆண் நட்பு என்றால் ..?
 இருந்தாலும்..
 இறந்தாலும்....
 மதிப்பிட முடியாது ...
 உதராணம்...யானை ...

பாதித்தது என்றால்...?
பலரோடு பழக 
வாய்ப்பு கிடைத்தும் ..
சிலரோடு நெருக்கமாக
பழகியது தான் ...
தவறு என்பேன் ..
இல்லையென்றால் .../
அந்த பலரோடு 
இந்த சிலரும் ...
போய் இருப்பார் ...
நானும் கண் 
கலங்காமல்...போய் இருப்பனே...!!  

பெண் நட்பு என்றால் ..?
கல்லூரி போட்டோவை 
காட்டினாலே..
'வெறும் நட்புதானடி?"
என்பார்...அப்பா அம்மாவிடம் ... 

தங்கையோடு தனியாக 
பேசினாலே...'சூப்பர் ஜோடி'
என்று சொல்லும் 
தரம் கெட்ட உலகம் ...
என்...தோழி 
மட்டும் விதிவிலக்கா ?..

மறுகணம் அழைத்தது 
செல்பேசி ....
மறு கரையில் ...
பெண் குரல் ...
மகனின் தோழி என்றால் ...
இல்லை என்றேன் ..
சாதரணமாக...
யாருப்பா 
போன்ல ...?
எப்போதும் ...
வரும் wrong  call 
என்றேன் ..
பொறுப்புள்ள 
அப்பாவாயாய் ....

Tuesday 23 March 2010

\/\/\/\/நானும் ஒருவன்\/\/\/\/\

"இங்கே 
இயந்திரமாய்..
இருப்பவர்களில் நானும் ஒருவன் ....

இல்லாத ஒன்றை 
இருப்பதாய் நினைத்து 
தேடுபவர்களில் நானும் ஒருவன் ....

சிக்னலில் பிச்சை எடுக்கும் 
சிறுமிஐ பார்த்து 
பரிதாபப்படும் மனிதர்களில் நானும் ஒருவன் ....

வருமான வரி 
குறைத்துக் காட்டி 
அரசை ஏமாற்றும் 
ஏமாற்றுகாரர்களில் நானும் ஒருவன் ....

கிரிக்கெட்டில் இந்தியா வென்றால் 
'இந்தியன் ' என்று...
கூச்சலிடுபவர்களில் நானும் ஒருவன் ....

என்னை கடந்து
எந்த பெண் 
சென்றாலும் ...
ஒரு நிமிடம் நின்று 
ரசிப்பவர்களில் நானும் ஒருவன் ....

கல்லூரி தோழியை ..அவள் 
கணவனோடு பார்த்து விட்டு 
கண்டு கொள்ளாமல் 
செல்பவர்களில் நானும் ஒருவன் .....

பொண்ணும்-பையனும் 
பேசினால் ...அவர்கள் 
காதலர்கள் தான் என்று 
கற்பனை செய்பவர்களில் நானும் ஒருவன் ....

புதுபடத்தை ..திருட்டு 
வீசிடி இல் பார்க்கும் ..
திருட்டு பயல்களில் நானும் ஒருவன் ...

முதல் குழந்தை ..
பெண் குழந்தை பிறந்தால் 
கொஞ்சம் வருத்தபடும்
சராசரி மனிதர்களில் நானும் ஒருவன் ...

எல்லாம் தெரிந்தும் 
தெரியாமல் போல் நடக்கும்
 எத்தனையோ ...பேர்களில் 
                                   நானும் ஒருவன் ...."

Tuesday 9 March 2010

சிலரை பிடிக்கும் ..

"சிலரை பிடிக்கும் ...
 ஆனால் ...
 சிலரை மட்டும் ...
 தான் ...ரொம்ப பிடிக்கும் ....

எங்கு...எப்படி


"எதையோ ...
  பறி கொடுத்தது ...போல் 
 இருக்கிறது ...
 ஆனால் ..,
 எங்கு ,
 எப்படி ,
 யாரிடம் ....
 என்று தான் ...
 தெரியவில்லை ..."

Monday 8 March 2010

$$$$-- மகளிர் தின கவிதை--$$$$


" இறைவன் இடத்தும்..
  இரண்டாம் படைப்பு தான் ...

  தாய்ப்பாலை ருசிக்கும் 
  முன்னே ..கள்ளிபாலை..
  ருசித்து மாண்டவர்கள் ...
  என் இனத்தவர் ...

  நல்லவேளை பாரதி ..
 ஆணாய் பிறந்தான் ...
  இல்லையேல் ...
  இன்னும் ஒரு 
  நூற்றாண்டு ஆகி இருக்கும் ..
  எங்கள் சுதந்தரம் கிடைக்க...

 ஆடை கிழித்து ..
  வேட்டையடாபடுகீறோம்...
  எங்களக்கு
  இருப்பது தானே ..
  அவர்கள் அம்மாக்கும் ...
  இருக்கும் ..
  தெரியவில்லையா ?...
  இந்த காமுக வேடர்கள்கு.....

  காதல் ...
  போல் இல்லை...
  காதலிப்பவர்கள் ...சுத்தமாக ...?....
  
   சம உரிமை கிடைத்தாலும் ....
   சங்கடத்தில் ...
   சங்கமிக்கும் ...என் போல்  
   சகோதரிக்காக...
   சப்தமில்லாமல்...   
   வேண்டிகொள்ளுகிறோம்...
         தாயின் வயிற்றில்..
         இருக்கும் போதே ...!!!! 

"முதல் முதல் ...."


" முதல் பார்வைஎலே ..
   பிடித்து போனது ...
   நீ மட்டும் தான் டி டி ..."

Sunday 7 March 2010

உன் திமிரே ...திமிரடி


 " ஒரு நாள் ..,நாம் வீட்டில் 
   நாடகம் அரங்கேற்றம் ...
   குழந்தைகள் முன்னிலையில் ...
   காட்சி என்னவென்றால் ?....
   காதலன் ,காதலியிடம்...
   காதலை சொல்லுவது ...
   நடிப்பில் கூட ...
   என் காதலை ....
   முதல் முறை ..ஒத்து கொள்ளாத...
   உன் திமிரே ...திமிரடி ..."

காத்திருக்க ....!சொன்னாய்....


 " காத்திருக்க 

   சொன்னாய் ...ஆனால் 
   எத்தனை யுகங்கள்....?
   என்று சொல்லவில்லையே டி ...டி 
   பலூன் உடைத்த ..,
   சிறு குழந்தையாய் ..,
   கண் துடைத்து ..,
   ஆறுதல் சொல்லிக்..
   கொண்டு இருக்றேன்...
    என் காதலுக்கு .... " 

மறத்து... கிடக்கிறது "

" கோமா நிலை 
  மருத்துவத்தில் 
    மட்டும் இல்லை ....
  சொல்ல மறந்த ..
        காதலிலும் ...
   சொல்லி மறுத்த 
        காதலிலும் .... 
 பழகி பிரிந்த
        காதலிலும் ....
  மறத்து...
   கிடக்கிறது " 

Saturday 6 March 2010

('')சிலரிடம் மட்டும் தான் ...



சிலரிடம் மட்டும் தான் ...,

  சின்ன சின்ன கோபம் ,
  சின்ன சின்ன பாசம் ..,
  சின்ன சின்ன சண்டை ....
  சின்ன சின்ன கண்ணீர் ..."