Monday 15 February 2010

India -Pak Border


கவிதை வடிவில் ஒரு முயற்சி .....
       (இந்திய -பாக் எல்லை ...இரண்டு ராணுவ வீரர்கர்கள் ... பேசும் போது)
இந்திய வீரன் :: ஹாய் 
பாக் வீரன் :ஹாய் ...
இந்திய வீரன்:நீங்கள்  நலமா ?
பாக் வீரன் :நலம் நண்பரே ....இந்தாங்க ...இந்த காபில ஆளுக்கு பாதி பாதி ...சாபிடோவும்... ?...
இந்திய வீரன் :(அருகில் இருக்கும்  நாயை கூப்பிடு அதற்கு ஊற்றி ...அது சாப்ட்ட பின் தான் சாப்டான்...)
பாக் வீரன் :என்ன ?...இந்திய நண்பரே ..!!!என் மீது சந்தேகம் ...பட்டு விட்டர்களே???....
இந்திய வீரன் :என்னை நம்பி எங்கள் நாட்டில் நூறு கோடி மக்கள் இருக்கீறார்கள் ...அதான் நண்பரே......
பாக் வீரன் :சரி...எனக்கு ரொம்ப பசிக்கிறது ...உங்க கிட்ட உள்ளே அந்த பிஸ்கட் ஒன்னு தாங்க ...
இந்திய வீரன் :இந்தாங்க....அப்புறம் ..நான் ஒன்னு கேட்கவா ...?
பாக் வீரன் :ஆம் !!!கேளுங்கள் ...
இந்திய வீரன்:நான் கொடுத்த பிஸ்கட் மீது உங்கள்க்கு பயம் இல்லையா ...?
பாக் வீரன்:இல்லை நண்பரே !!!! இந்தியர்கள் ..என்றும் விருந்தில் ...மருந்து ...வைக்க மாட்டார்கள்
இந்திய வீரன்: கண்ணீரோடு ..........

Idhu Thann Nijam

                  "
              கனவுகளோடு தான் 
              படித்தேன்...கல்லூரில் ,.
              கடன் இன்னமும் .இருக்கிறது, 
              என்றார் ...என் அப்பா ,
              அம்மாவிடம் ...

              கணக்கு போட்டு பார்த்தேன் ...
              உள்நாடை விட -அயல்நாடு 
              அதிகம் கை கொடுக்கும் என்று 
              கண்டுபிடித்தேன் ..
              எப்படி சொல்ல என்று 
              கை பிசைந்தார்...அப்பா ,
              அயல்நாடு என்றால் ..
              கொள்ளைப்ரியம் ..என்றேன் ..
              புன்சிரிப்போடு ...$$$$

              பொய் சொல்லவும் ..
              பழகி விட்டான்..என்று 
              நினைத்தார் ..,அப்பா ...

              கிளம்பும் போது  புரிந்தேன் ..
              என்னை போல் எத்தனை...
              சகோதர்கள்...அனுபவித்து   
              இருப்பார்கள் என்று ...
              தந்தை-ஐ பார்த்தேன் ...
              ஒரு கண் அழுதது ..
              ஒரு கண் சிரித்தது ...
              தாய் -ஐ பார்த்தேன் 
              இரு கண்ணும் அழுதது ..

              தொலைபேசி ஐ கண்டு பிடித்தவன் ..கூட 
              எங்களை போன்று ...
              சந்தோசம் பட்டு இருக்க மாட்டன்...

              திருமணம் என்றனர் ..
              எனக்குள் ..
              ஒரு சந்தோசம் ..
              ஒரு வருத்தம் ..

              ஆசை அறுபது நாள் ..
              மோகம் முப்பது நாள் ..
              ஆக மொத்தம் லீவ் ..தொண்ணுறு நாள்...
              .தான் ..
               கிளம்பும் போது ..
               இப்போது ஆறு கண்கள் ...
               அழுதது ....

               மாங்காய் கடிக்க ..
               போகிறேன் ..என்றால் மனைவி..  
               அவளோடு இருக்கும் 
               சின்ன சின்ன சந்தோசங்களை ..
               இந்த $$$தினார்.$$$.
               தருமா ?..என்று அழுதேன் ...

               ஆறு வருடம் ..
               கழித்து வந்தேன் ...வீட்டிற்கு ..
               தெருவில் விளையாடி ...
               கொண்டு இருந்தான் ..என் பையன்..
               கட்டி அணைக்க போனேன் ..
               "அம்மா யாரோ ஒரு 
                மாமா வந்து இருக்கா 
                பாரேன் ..என்றான் ...".
                ஒடிந்து போனேன் ...டா ..டா ..
                உன் வார்த்தையோடு ..."