Wednesday 24 March 2010

சில கேள்விகள்...

"மலையில்...
 மழைச் சாரலில் ..
 மாலையின்...மயக்கத்தில் ,
 மகனோடு நான் ..

 சில கேள்விகள் 
 பிடிக்கும் ..
 சிலர் ..
 கேட்பதால் மட்டும் ....

அப்பா ,
நட்பு என்றால் ..?
மாதா...
பிதா ...,
                                           குரு ...,
                                           நண்பன் ...,
                                           தெய்வம் என்பேன் ....

ஆச்சரியமான உண்மை என்றால்..?
 சிறு வயதில் ..,
 அம்மா சொல்லி 
 அப்பா தெரியும் ,,,
 அப்பா சொல்லி ...
 அனைத்து உறவும் 
 தெரியும் ...
 இது தான் உன் 
 நண்பன் என்று ....
 இது வரை .எவரும் 
 கூறியது இல்லை ....யப்பா ....

 ஆண் நட்பு என்றால் ..?
 இருந்தாலும்..
 இறந்தாலும்....
 மதிப்பிட முடியாது ...
 உதராணம்...யானை ...

பாதித்தது என்றால்...?
பலரோடு பழக 
வாய்ப்பு கிடைத்தும் ..
சிலரோடு நெருக்கமாக
பழகியது தான் ...
தவறு என்பேன் ..
இல்லையென்றால் .../
அந்த பலரோடு 
இந்த சிலரும் ...
போய் இருப்பார் ...
நானும் கண் 
கலங்காமல்...போய் இருப்பனே...!!  

பெண் நட்பு என்றால் ..?
கல்லூரி போட்டோவை 
காட்டினாலே..
'வெறும் நட்புதானடி?"
என்பார்...அப்பா அம்மாவிடம் ... 

தங்கையோடு தனியாக 
பேசினாலே...'சூப்பர் ஜோடி'
என்று சொல்லும் 
தரம் கெட்ட உலகம் ...
என்...தோழி 
மட்டும் விதிவிலக்கா ?..

மறுகணம் அழைத்தது 
செல்பேசி ....
மறு கரையில் ...
பெண் குரல் ...
மகனின் தோழி என்றால் ...
இல்லை என்றேன் ..
சாதரணமாக...
யாருப்பா 
போன்ல ...?
எப்போதும் ...
வரும் wrong  call 
என்றேன் ..
பொறுப்புள்ள 
அப்பாவாயாய் ....

Tuesday 23 March 2010

\/\/\/\/நானும் ஒருவன்\/\/\/\/\

"இங்கே 
இயந்திரமாய்..
இருப்பவர்களில் நானும் ஒருவன் ....

இல்லாத ஒன்றை 
இருப்பதாய் நினைத்து 
தேடுபவர்களில் நானும் ஒருவன் ....

சிக்னலில் பிச்சை எடுக்கும் 
சிறுமிஐ பார்த்து 
பரிதாபப்படும் மனிதர்களில் நானும் ஒருவன் ....

வருமான வரி 
குறைத்துக் காட்டி 
அரசை ஏமாற்றும் 
ஏமாற்றுகாரர்களில் நானும் ஒருவன் ....

கிரிக்கெட்டில் இந்தியா வென்றால் 
'இந்தியன் ' என்று...
கூச்சலிடுபவர்களில் நானும் ஒருவன் ....

என்னை கடந்து
எந்த பெண் 
சென்றாலும் ...
ஒரு நிமிடம் நின்று 
ரசிப்பவர்களில் நானும் ஒருவன் ....

கல்லூரி தோழியை ..அவள் 
கணவனோடு பார்த்து விட்டு 
கண்டு கொள்ளாமல் 
செல்பவர்களில் நானும் ஒருவன் .....

பொண்ணும்-பையனும் 
பேசினால் ...அவர்கள் 
காதலர்கள் தான் என்று 
கற்பனை செய்பவர்களில் நானும் ஒருவன் ....

புதுபடத்தை ..திருட்டு 
வீசிடி இல் பார்க்கும் ..
திருட்டு பயல்களில் நானும் ஒருவன் ...

முதல் குழந்தை ..
பெண் குழந்தை பிறந்தால் 
கொஞ்சம் வருத்தபடும்
சராசரி மனிதர்களில் நானும் ஒருவன் ...

எல்லாம் தெரிந்தும் 
தெரியாமல் போல் நடக்கும்
 எத்தனையோ ...பேர்களில் 
                                   நானும் ஒருவன் ...."

Tuesday 9 March 2010

சிலரை பிடிக்கும் ..

"சிலரை பிடிக்கும் ...
 ஆனால் ...
 சிலரை மட்டும் ...
 தான் ...ரொம்ப பிடிக்கும் ....

எங்கு...எப்படி


"எதையோ ...
  பறி கொடுத்தது ...போல் 
 இருக்கிறது ...
 ஆனால் ..,
 எங்கு ,
 எப்படி ,
 யாரிடம் ....
 என்று தான் ...
 தெரியவில்லை ..."

Monday 8 March 2010

$$$$-- மகளிர் தின கவிதை--$$$$


" இறைவன் இடத்தும்..
  இரண்டாம் படைப்பு தான் ...

  தாய்ப்பாலை ருசிக்கும் 
  முன்னே ..கள்ளிபாலை..
  ருசித்து மாண்டவர்கள் ...
  என் இனத்தவர் ...

  நல்லவேளை பாரதி ..
 ஆணாய் பிறந்தான் ...
  இல்லையேல் ...
  இன்னும் ஒரு 
  நூற்றாண்டு ஆகி இருக்கும் ..
  எங்கள் சுதந்தரம் கிடைக்க...

 ஆடை கிழித்து ..
  வேட்டையடாபடுகீறோம்...
  எங்களக்கு
  இருப்பது தானே ..
  அவர்கள் அம்மாக்கும் ...
  இருக்கும் ..
  தெரியவில்லையா ?...
  இந்த காமுக வேடர்கள்கு.....

  காதல் ...
  போல் இல்லை...
  காதலிப்பவர்கள் ...சுத்தமாக ...?....
  
   சம உரிமை கிடைத்தாலும் ....
   சங்கடத்தில் ...
   சங்கமிக்கும் ...என் போல்  
   சகோதரிக்காக...
   சப்தமில்லாமல்...   
   வேண்டிகொள்ளுகிறோம்...
         தாயின் வயிற்றில்..
         இருக்கும் போதே ...!!!! 

"முதல் முதல் ...."


" முதல் பார்வைஎலே ..
   பிடித்து போனது ...
   நீ மட்டும் தான் டி டி ..."

Sunday 7 March 2010

உன் திமிரே ...திமிரடி


 " ஒரு நாள் ..,நாம் வீட்டில் 
   நாடகம் அரங்கேற்றம் ...
   குழந்தைகள் முன்னிலையில் ...
   காட்சி என்னவென்றால் ?....
   காதலன் ,காதலியிடம்...
   காதலை சொல்லுவது ...
   நடிப்பில் கூட ...
   என் காதலை ....
   முதல் முறை ..ஒத்து கொள்ளாத...
   உன் திமிரே ...திமிரடி ..."

காத்திருக்க ....!சொன்னாய்....


 " காத்திருக்க 

   சொன்னாய் ...ஆனால் 
   எத்தனை யுகங்கள்....?
   என்று சொல்லவில்லையே டி ...டி 
   பலூன் உடைத்த ..,
   சிறு குழந்தையாய் ..,
   கண் துடைத்து ..,
   ஆறுதல் சொல்லிக்..
   கொண்டு இருக்றேன்...
    என் காதலுக்கு .... " 

மறத்து... கிடக்கிறது "

" கோமா நிலை 
  மருத்துவத்தில் 
    மட்டும் இல்லை ....
  சொல்ல மறந்த ..
        காதலிலும் ...
   சொல்லி மறுத்த 
        காதலிலும் .... 
 பழகி பிரிந்த
        காதலிலும் ....
  மறத்து...
   கிடக்கிறது " 

Saturday 6 March 2010

('')சிலரிடம் மட்டும் தான் ...



சிலரிடம் மட்டும் தான் ...,

  சின்ன சின்ன கோபம் ,
  சின்ன சின்ன பாசம் ..,
  சின்ன சின்ன சண்டை ....
  சின்ன சின்ன கண்ணீர் ..."

Friday 5 March 2010

காரின் மீது கூட ....

  .


  " சாலை ஓரத்தில் ..
    தூசு படிந்து நிற்கும் 
    காரின் மீது இயல்பாய் ..
    கிறுக்க தோன்றுகிறது ..
    உன் பெயரை மட்டும் "..

****வேண்டவே வேண்டாம்****

" கவிதை எழுத
முயற்சி செய்ய வேண்டாம் ..
மீறினால் ..
காதல் செய்ய வேண்டும் ..
..என் கஷ்டம் ...
என்னோடு போகட்டுமே ....
"

--> ரசனையோடு<-- ..

"மழை சாரலில் ஒரு
குடையில் ,இருவர் ..
ரசித்தது ..மழையை அல்ல ...
அவள் நெருக்கத்தை ..

மோட்டார் சைக்கிளில்
மலை பயணம் ...
ரசித்தது..மலையை அல்ல ..
அவள் மூச்சு காற்றை ..

நெருக்கமான பேருந்து
பயணத்தில் ..ரசித்தது .
கூட்டத்தை அல்ல ...
அவள் கூச்சத்தை ....

மாடிகளில் நின்று
பட்டம் விடுகில்..
ரசித்தது ,,பட்டத்தை அல்ல..
தெரியாமல் மோதி
கொள்ளும் மோதல்களை ..."