Tuesday 6 April 2010

கவிஞன் வலி..கவிஞன் .அறிவானோ ....?


"கவிதை எழுத 
 இடம் தேடி ...,
 கடற்கரையில்
 கால் பதித்தேன் ..,அங்கே !!!!
 எல்லோரும்  
 எல்லை மீறிய காதலர்கள் ..
 எழுந்து விட்டேன் ...
 ஒட்டிய மணலோடு .....!!!!

கல்லூரிஐ 
எட்டிப் பார்த்தேன் ...
சரஸ்வதிஐ விலை பேசினர்
மெத்த படித்த முட்டாள்கள் ...!!!

கவி அரங்கத்தில் 
இடம் கேட்டேன் ...!
புதுக்கவிதை..
அரங்கேற்றபடாதம்.!!...
கவி பாடினர் ...
பழைய கவிகள் ....

அடுத்து ...
பூங்காவில்...
பூக்களை ..
அமைதியாய்...அமர செய்து 
கவி சொல்ல ஆரம்பித்தேன்...
காலம் கடந்ததால்..
கதவை அடைத்தான்..
காவலாளி ....     
சிறு குழந்தயை 
ஆசை காட்டி ...
ஏமாற்றிய ...உணர்வுடன் 
திரும்பினேன்...

இறுதியாக ...
நிலவு நினைவு வர...
அன்று அமாவாசையாம் ...
நிலவும் வரவில்லை ...

அடக்கடவுளே...!!!
இப்படியுமா.?.என்று நினைக்க..,
தூரத்தில் ஒரு மனிதன் ..
கைநீட்டி ...அழைத்தான் ...
அவனை ,,அவனே ...
இனம் காண...வெளிச்சம் ...
வா,உட்கார்,எழுது ..
என்றார் ...
தெருவில் நிற்கும் ...என் 
தேசியக் கவி ...
எழுதினேன்...
 "கவிஞனின் 
  வலி...
  கவிஞன் ...
  அறிவானோ ....??"..."